Loading . . .




வேகத்தடையின் உயரத்தினை குறைப்பதற்கு மாநகராட்சி ஆணையாளர்  மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அறிவுரை

The Forecast 1 year ago கோவை

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவ குரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின் ராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை  அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக செய்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், ஒண்டிபுதூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்தி மாநகர் அருகில் அமைந்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்கு (FCI Godown) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வேகத்தடையின் உயரத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.62 க்குட்பட்ட கொங்கு நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் புதிய திட்டப்பணிகள் அமைப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து, கிழக்கு மண்டலம் ஒண்டிபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் திருச்சி சாலை இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News