Loading . . .




1 லட்சத்து 50 ஆயிரம் மர நாற்றுகள் உற்பத்தி : விவசாயிகள், பொதுமக்களுக்கு இலவசம்

The Forecast 1 year ago கோவை

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரம் மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இதுகுறித்து காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறியதாவது:-

கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையின் நாற்றுபண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் தேக்கு, மலைவேம்பு, சவுக்கு, மகாகனி, புங்கன், பாதம், வேம்பு உள்ளிட்ட வகையிலான 1 லட்சத்து 50 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகள், பள்ளிகள், கல்லூரிகள் தொழிற்சாலைகள் மற்றும் தரிசு நிலதாரர்களுக்கு இலவசமாக நாற்றுகள் வழங்கப்படும். வாங்க விரும்புவோர் 9843611370, 9626469997 எண்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு ஆதார் நகல், புகைப்படம் மற்றும் சிட்டா ஆகிய ஆவணங்கள் சமர்ப்பித்து நாற்றுகள் பெற்றுக்கொள்ளலாம்  என கூறினார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News