Loading . . .




ஆழியார் அணையின் இயங்காத நிலையில் இருக்கும் மதகுகளை சரிசெய்ய கோரிக்கை

The Forecast 1 year ago கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப.,  தலைமையில் நடைபெற்றது. 

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. பின்னர் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். தொண்டாமுத்தூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் அங்கக வேளாண்மை செய்த விவசாயிகளுக்கு அங்கக சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள 83 குளங்களில் இருந்து வண்டல் மண் தூர் வாருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் பயிர் பருவத்தில் சாகுபடி செய்வதற்கு தேவையான விதை மற்றும்  உரம் போதிய அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

கோவை மாவட்டத்திலுள்ள கருவேலமரங்களை அகற்றவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள  நீர் வழிப்பாதைகளை மீட்டெடுத்து நிலத்தடி நீர் அளவை உயர்த்தவும், யானை மற்றும் வன விலங்குகள் வழித் தடங்களை உறுதி செய்து அவற்றை பாதுகாக்கவும்,     ஆனைமலை வட்டாரத்திலுள்ள ஆழியார் அணையின் இயங்காத நிலையில் இருக்கும் மதகுகளை சரிசெய்யுவும், பருவமழைக்கு முன்பு நீர் வழிப்பாதைகளை தூர்வாராவும், தடுப்பணைகள் கட்டவும் விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்களிடம் கோரிக்கை அளித்தனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News