Loading . . .




வஉசி பூங்காவில் மீண்டும் ரயில் சேவை வல்லுநர் குழு விரைவில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க முடிவு

The Forecast 4 years ago கோவை

கோவை, மே 23: கோவை வஉசி உயிரியல் பூங்காவில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு ரயில் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வல்லுநர் குழு விரைவில் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை வஉசி உயிரியல் பூங்காவின் உள்ளே சிறிய ரக பொழுதுபோக்கு ரயில் சேவை உள்ளது. கொரோனா தொற்று பரவலின்போது கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்ட இந்த ரயில் சேவையானது, இதுவரை துவங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தற்போது ரயில் சேவையை இடமாற்றம் செய்து, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த ரயில் விரைவாக பழுது நீக்கம் செய்யப்படும். வஉசி உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் அருகில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா வளாகத்துக்கு இந்த ரயிலை இடமாற்றம் செய்து தனியாக இயக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காக வல்லுநர் குழு விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை பொறுத்து அதற்கு ஏற்றார்போல் நிதி செலவீனம் பெறப்பட்டு பொழுதுபோக்கு ரயில் சேவையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றார்

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News