அமைச்சர் .கே.என்.நேரு சென்னை, தங்கசாலையில் பேம்படுத்தப்பட்ட கழிவுநீரகற்று நிலையத்தை அடிக்கல் நாட்டினார்
The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள் மற்றும் இந்து சமயம் மற்றும் அணுநிலையத் துறை
அமைச்சர் .பி.கே.சேகர்பாபு ஆகியோர் (08.10.2022) சென்னை, தங்கசாலையில் உள்ள அரசு மைய அச்சகம் அருகில், சென்னை,
வடீ.சி சாலையில், ஜட்காபுரம், வால்டாக்ஸ் ரோட்டில் பேம்படுத்தப்பட்ட கழிவுநீரகற்று நிலையம். கோவிந்தப்பா தெருவில் புதிய அலுவலக
கட்டிடங்களை திறந்து வைத்து, சென்னை ஏழு கிணறு மலையப்பன் தெரு கழிவநீரகற்று நிலையத்திலிருந்து புதிய கழிவுநீர் உந்து குழாய்
பதிக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்கள். இந்நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மத்திய
சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் திருஆர்.மூர்த்தி, துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார்,
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப. சென்னைப் பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப.,சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் ராஜ கோபால் சுன்கரா. இ.ஆ.ப. பெருநகர சென்னை மாநகராட்சி 5-வது
மண்டலக் குழுத்தலைவர் .ப.ஸ்ரீராமுலு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments