பருவமழையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆய்வு
The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னையின்
பல்வேறு பகுதிகளில் பருவமழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப்
பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளை நகராட்சி
நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் மற்றும் இந்து சமயம் மற்றும்
அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே. சேகர்பாபு ஆகியோர் (03.112022) பார்வையிட்டு
ஆய்வு செய்தனர்.
கடந்த 31:10.2022 முதல் 0211.2022 வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் பருவமழை
பரவலாகப் பெய்துள்ளது. இரண்டு நாட்களில் அதிகப்படியான மழைப் பொழிவு இருப்பினும்,
கடந்த 6 மாத காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட நிரந்தர
வெள்ளத் தடுப்பு பணிகளின் காரணமாக மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர்த்தேக்கம்
இல்லை. ஒரு சில இடங்களில் இருந்த மழைநீர்த்தேக்கத்தை உடனடியாக அகற்றும் பொருட்டு
மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நகராட்சி நிருவாகத்துறை
அமைச்சர் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
அவர்கள் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர்
பார்வையிட்டு மழைநீரை வெளியேற்ற அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி
உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள்
மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் இன்று
(03.112022) இராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட வேலாயுதம் தெரு, எல்.ஜி. சாலை, மான்டியத்
சாலை ஆகிய பகுதிகளிலும், வார்டு-60க்குட்பட்ட மின்ட், மூக்கர் நல்லமுத்து தெரு. வார்டு.
55க்குட்பட்ட செயின்ட் சேவியர் சாலை, .வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பெரியார் நகர்
மருத்துவனை, எஸ்.ஆர்.பி. காலனி, வார்டு.64க்குட்பட்ட கம்பர் நகர், ஜி.கே.எம். காலனி ஆகிய
பகுதிகளைப் பார்வையிட்டு மழைநீர்த் தேக்கமின்றி சாலைகள் போக்குவரத்திற்கு பாதிப்பு
இல்லாத வகையில் சீரான நிலையில் உள்ளதையும், சுகாதார நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படுவதையும் ஆய்வு செய்தனர். மேலும் மழைநீர் தேங்கியுள்ள ஒரு சில இடங்களில் மழைநீர் அகற்றும் பணி நடைபெறுவதை அமைச்சர் பெருமக்கள்
பார்வையிட்டு, பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார்கள்.
பின்னர், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில்
தெரிவித்ததாவது:
கடந்த 2021ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையின் போது சென்னையில் பல
பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழைநீர் தேங்கியது. தமிழ்நாடு
முதலமைச்சர் அவர்கள் நாள்தோறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார்கள்.
மேலும் சென்னையில் மழை வெள்ளப் பாதிப்புகளிலிருந்து நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும்
வகையில் ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரி திருப்புகழ் அவர்கள் தலைமையில் வெள்ள
மேலாண்மைக் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளின்படி மழைநீர் வடிகால் பணிகள்
மேற்கொள்ளப்பட்டன.வெள்ள மேலாண்மைக் குழுவின் பரிந்துரையின்படி, பணிகள் மேற்கொள்ளப்பட்ட
இடங்களில் மழைநீர்த்தேக்கம் இல்லை. தற்சமயம் மழைநீர்த் தேக்கம் ஏற்பட்டுள்ள ஒரு சில
இடங்களிலு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்தும் வகையில் இக்குழுவானது ஆய்வு செய்து தனது
பரிந்துரைகளை வழங்கவுள்ளது. இப்பரிந்துரைகளின் அடிப்படையில் பணிகள்
மேற்கொள்ளப்பட்டு மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்,
இந்நிகழ்வின்போது, மேயர் ஆர்.பிரியா அவர்கள், மதிப்பிற்குரிய
துணை மேயர் மு.மகேஷ்குமார் அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இஆப, அவர்கள், சென்னைப் பெருநகர்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் .ஆர்.கிர்லோஷ்
குமார், இ.ஆப, அவர்கள், துணை ஆணையாளர்கள் .எம்.எஸ்.பிரசாந்த், இஆப, (பணிகள்)
அவர்கள், .எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப. (வடக்கு வட்டாரம்) அவர்கள், எஸ்.ஷேக்
அப்துல் ரஹ்மான், இஆப, (மத்திய வட்டாரம்) அவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல்
மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் ராஜ கோபால சுங்கரா, இஆப., அவர்கள்,
தலைமைப் பொறியாளர் (பொது) .எஸ்.ராஜேந்திரன் அவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள்
பிஸ்ரீராமுலு அவர்கள்,.நேதாஜி யு.கணேசன் அவர்கள், சரிதா மகேஷ்குமார்
அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments