Loading . . .




பருவமழை கட்டுப்பாட்டு அறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை

பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை

மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள் அவர்கள் 

(01:112022) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி

ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில்

செயல்பட்டு வரும் பருவமழை கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை

மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (01:11.2022)

பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது,  இந்து சமயம் மற்றும்

அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் உடனிருந்தார்.

இந்த ஆய்வின்போது,  அமைச்சர் பெருமக்கள் கண்காணிப்பு கேமராக்கள்

மூலம் சுரங்கப்பாதைகளில் மழைநீர் கண்காணிக்கப்படுவதைப் பார்வையிட்டனர்.

மாநகராட்சியின் 1913 உதவி எண்ணில் புகார்கள் பெறப்படுவதையும், அப்புகார்களை

தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், 1913 உதவி எண்ணில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற தொலைபேசி

அழைப்பினை  அமைச்சர் பெருமக்கள் தொடர்பு கொண்டு பேசி அவர்களால்

கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், தொடர்புடைய இடத்தில் அலுவலர்களை உடனடியாக

அனுப்பி மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டனர். தொடர்ந்து, பிற சேவைத் துறை

அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இராயபுரம் மண்டலம், வார்டு.

58க்குட்பட்ட சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மாநகராட்சியின் சார்பில்

அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் உள்ள இடத்தில் மழைநீர் வெளியேறுவதைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், வார்டு-57க்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள மழைநீரானது பக்கிங்ஹாம்

கால்வாயில் இணையும் இடத்தில் வெளியேறுவதையும், பாரிமுனை பிரகாசம் சாலை,

திருவிகநகர் மண்டலம், வார்டு:77க்குட்பட்ட புளியந்தோப்பு பிரதான சாலை மற்றும்

திருவிக.நகர் மண்டலம், வார்டு.64க்குட்பட்ட கொளத்தூர் 70 அடி சாலை ஆகிய இடங்களில்

மாநகராட்சியின் சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மழைநீர்

வெளியேற்றும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து,

திரு.வி.நகர் மண்டலத்திற்குட்பட்ட பெரம்பூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனை பகுதியில்

தாழ்வான இடத்தில் தேங்கியுள்ள மழைநீரினை உடனடியாக வெளியேற்ற அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, இராயபுரம் மண்டலம், வார்டு-61க்குட்பட்ட புதுப்பேட்டை அய்யாசாமி

சாலையில் தேங்கியுள்ள மழைநீரினை 25 குதிரைத் திறன் கொண்ட டீசல் பம்புகள் மூலம்

வெளியேற்றும் பணியினை பார்வையிட்டனர். பின்னர், சாமி தெருவில் உள்ள மாநகராட்சி

விளையாட்டுத் திடலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி விரிசலடைந்து விழும் நிலையில் உள்ளதை கவனித்த  அமைச்சர் பெருமக்கள் அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை

மேற்கொள்ள ஆணையாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், வடகிழக்கு பருவமழையில்

மாமநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் முழு கண்காணிப்புடன் பணியாற்றிட உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள், திரு.வி.க.நகர்

சட்டமன்ற உறுப்பினர் திருதாயகம் கவி அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர்.மு.மகேஷ்குமார் அவர்கள், முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப. அவர்கள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் .ஆர்.கிர்லோஷ் குமார், இஆ.ப, அவர்கள், இணை ஆணையாளர்(சுகாதாரம்) திரு.சங்கர்லால் குமாவத், இ.ஆய, அவர்கள், துணை ஆணையாளர்கள்

திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, (பணிகள்) அவர்கள், திரு.விஷூ மஹாஜன், இஆ.ப. (வருவாய் (ம)நிதி) அவர்கள், திருமதி டி.சினேகா, இஆப., (கல்வி) அவர்கள், திரு.எம்.சிவகுரு பிரபாகரன்,இஆ.ப, (வடக்கு வட்டாரம்) அவர்கள், திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், இஆப, (மத்திய வட்டாரம்) அவர்கள், தலைமை பொறியாளர் (பொது) திரு.எஸ்.ராஜேந்திரன் அவர்கள்,

மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.பிஸ்ரீராமுலு அவர்கள், திருமதி சரிதா மகேஷ்குமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

நகராட்சி நிர்வாகத் துறை Relateted News

Latest News