சென்னையில் வடிகாலின் வழியே மழை நீர் வெளியேறி எம்.ஜி.ஆர். கால்வாயில் இணைவதை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் . கே.என்.நேரு ஆய்வு
The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை
பெருநகர செனமாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 136 டாக்டர் ராமசாமி சாலையில் புதியதாக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகாலின் வழியே மழை நீர் வெளியேறி எம்.ஜி.ஆர். கால்வாயில் இணைவதை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் . கே.என்.நேரு அவர்களும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களும் (12.11.2022 பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது மேயர் ஆர். பிரியா, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, மதிப்பிற்குரிய துணை மேயர் . மு.மகேஷ் குமார், முதன்மைச் செயலாளர்/ ஆணையாளர் .ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் திரு. ஆர்.கிர்லோஷ்குமார், இ.ஆ.ப., கணக்குக்குழுத் தலைவர் திரு. க.தனசேகரன், கோடம்பாக்கம் மண்டல குழுத் தலைவர் திரு. எம். கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் உடன் இருந்தனர்.
0 Comments