திருவண்ணாமலை நகராட்சியில் வணிக வளாகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை
(18.10.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் .கே.என்.நேரு அவர்கள் தலைமையில், திருவண்ணாமலை மாவட்டம்,
திருவண்ணாமலை நகராட்சியில் வணிக வளாகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை
அமைச்சர் .எ.வ.வேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் .க.முத்துசாமி,
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
.ஆர்.காந்தி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வீட்டு வசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை
முதன்மைச் செயலாளர் .ஹிதேஸ்குமார் எஸ். மக்வானா.இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகத் துறை இயக்குநர் .பா.பொன்னையா, இ.ஆ.ப., திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.முருகேஷ், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments