Loading . . .




தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கம் திட்டம் கோவை கோட்டத்தில்

The Forecast 3 years ago கோவை

கோவை, அக்.18: கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அடுத்த வாரம் முதல் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தாக கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை கோட்டத்தில் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என 4 மாவட்டங்களில் 2800க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகை வரும் 24ம் கொண்டாடப்பட உள்ளது. இதனை அடுத்து கோவை கோட்டத்தில் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோவை, மதுரை, திருச்சி, கரூர், தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்து அதிகரிக்கப்படும்,’’ என்றார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News

Latest News