நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்
The Forecast 3 years ago நகராட்சி நிர்வாகத் துறை
(20.01.2023) சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திருகே.என்.நேரு,
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் .தா.மோ.அன்பரசன் ஆகியோர் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரை
குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆரராகுல் நாத், இ.ஆ.ப,
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநர் திரு.ராஜ கோபால் சுன்கரா, இ.ஆ.ப, பொறியியல் இயக்குநர் சமிலால் ஜான்சன், முதன்மைப் பொறியாளர் .எ.மலைச்சாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments