மேட்டுப்பாளையம், செப். 25-
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, காரமடை ஊராட்சி ஒன்றியஅலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதில் தீயணைப்பு துறையினர் மற்றும் கேஸ் ஏஜென்சி மூலம் பாதுக்காப்பாக சமையல் செய்வது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காரமடை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பயிற்சி வழங்கினார். குழந்தைகளிடம் அனுகுமுறை மற்றும் தொடர்பு கொள்ளும் திறன் குறித்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலரால் பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு, யோக பயிற்சியாளரால் மன அழுத்தம் மேலாண்மை மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) ஆகியோர் பயிற்சியில் கலந்துக்கொண்ட 50 பேருக்கு அறிவுரைகளை வழங்கினார்கள்.
0 Comments