Loading . . .




சேலத்தில் கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவதை தாமதம் செய்யாமல் , விரைவுபடுத்த கோரிக்கை

The Forecast 2 years ago சேலம்

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி இயக்குனரகம், ஆன்லைன் மூலம் கட்டட அனுமதிகளை வழங்கி வருகிறது.இதனால், தாமதம் மற்றும் முறைகேடுகள் நடப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.  சேலத்தில், உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மாதந்தோறும் சராசரியாக 30க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.  ஆனால், கடந்த சில மாதங்களாக அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்வதால், மனை மற்றும் கட்டடங்களுக்கு அனுமதி பெற முடியாமல் மக்கள் போராடி வருகின்றனர்.  இப்பிரச்னையில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளதால், கட்டடங்களுக்கான அனுமதியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News