சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம், அன்னதானப்பட்டியில் நடைபெற்று வரும் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
The Forecast 1 year ago சேலம்
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி, செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்று வரும் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வுகாணும் வகையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்தவகையில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பில் மின் கட்டண குறைபாடு, பழுதடைந்த மின் மீட்டர் மாற்றம், குறைந்த மின்னழுத்தம் மற்றும் பழுதான மின் கம்பம் மாற்றம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகள் வழங்கும் வகையில் சேலம் மற்றும் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிலும் மனுக்களை பெறுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. குறிப்பாக, சேலம் மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட சேலம் நகரம், உடையாப்பட்டி, அன்னதானப்பட்டி, ஆத்தூர் மற்றும் வாழப்பாடி ஆகிய கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கும், மேட்டூர் மின் பகிர்மான வட்டத்திற்கு எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் தொடர்புடைய செயற்பொறியாளர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) அலுவலகத்திலும் நடைபெற்றது.
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் சேலம் மேற்கு மற்றும் சேலம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு சேலம், அன்னதானப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இச்சிறப்பு முகாமில் மின்கட்டணம், பழுதடைந்த மின் அளவி, மின்னழுத்தம் குறைபாடு மற்றும் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., சேலம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வி.திருநாவுக்கரசு, கோட்ட பொறியாளர்கள் ராஜவேலு, அன்பரசு உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments