சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம் மாவட்டத்தில் ரூ.3.14 கோடி மதிப்பீட்டிலான 17 புதிய வளர்ச்சித் திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்
The Forecast 1 year ago சேலம்
சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் சேலம் மாவட்டம், ஓமலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் காடையாம்பட்டி முதல்நிலைப் பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் ரூ.3.14 கோடி மதிப்பீட்டிலான 17 புதிய வளர்ச்சித் திட்டத்திற்கான பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பொன்மணி, இ.ஆ.ப., காடையாம்பட்டி பேரூராட்சித்தலைவர் ரா.குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கர், தனபால், காடையாம்பட்டி செயல் அலுவலர் ந.பொற்கொடி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments