Loading . . .




நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளைத் தவிர்ப்பது குறித்து அதிகளவிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் : சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., 

The Forecast 1 year ago சேலம்

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பது குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான திறன் மேம்பாட்டு கருத்தரங்குக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

மேலும், இத்திறன் மேம்பாட்டு கருத்தரங்கில் காலநிலை மாற்ற சர்வதேச ஆராய்ச்சியாளர் டாக்டர்.ஏ. இளங்கோவன் அவர்கள் நெகிழி பயன்பாடில்லா சேலம் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ. ராஜன், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ. நித்யலஷ்மி  உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News