சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ.ஆ.ப., ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் / ஆவின் பொது மேலாளர் பி.குமரேஸ்வரன் மற்றும்
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் புதியதாக 7 இலட்சம் லிட்டர் பால் கொள்ளளவு கொண்ட புதிய ஆலை கட்டுமானப் பணிகளையும், தினசரி 30 டன் பால் பவுடர் உற்பத்தி செய்யும் வகையில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும் பகுதி மற்றும் வெண்ணெய், நெய் உற்பத்தி செய்யும் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் இடத்தினை பார்வையிட்டு தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள்.
மேலும், தினசரி பால் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்தும், பால் பொருட்கள் உற்பத்தியின் திறன் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்), பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் சிறந்து விளங்குகிறது. இதுபோன்று தொடர்ந்து சேவையாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் / ஆவின் பொது மேலாளர் பி.குமரேஸ்வரன், துணை பொது மேலாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments