சேலம் மாநகராட்சி, சீரங்கபாளையம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புபை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., வழங்கினார்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நேற்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சி, சீரங்கபாளையம் நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., தலைமையில் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. உடன் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.இரவிக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments