தேசிய வாக்காளர் தின உறுதிமொழி சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ம. வாணி ஈஸ்வரி
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம்,இ.ஆ.ப., தலைமையில் வாக்காளர் உறுதிமொழி நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தேசிய வாக்காளர் தினம் இன்று ( 25.01.2024) கடைபிடிக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாகவும், வாக்கு இயந்திர செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையில், தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் வாக்காளர் தின உறுதிமொழியான - "மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக்குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதிமொழிகிறோம்" - என்ற உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ம. வாணி ஈஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எம்.ஜெகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவசுப்பிரமணியன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments