சேலம் மாநகராட்சி உள்ள கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 2 years ago சேலம்
சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப.,
அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் முறையாக பொதுமக்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், சொர்ணபுரி கூட்டுறவு பண்டக சாலை நியாய விலைக் கடையில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் பெற வருகைதந்த பொதுமக்களிடம் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
பின்பு பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் 1,258 முழுநேரம் மற்றும் 457 பகுதி நேரம் நியாய விலைக்கடைகள் என மொத்தம் 1,715 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைகள், AAY அட்டைகள், சர்க்கரை விருப்ப அட்டைகள், காவலர் அட்டைகள், வன காவலர் அட்டைகள் உள்ளிட்ட 10,99,258 குடும்ப அட்டைதார்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்திலுள்ள 10,99,258 குடும்ப அட்டைதார்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 15,000 மெ.டன் அரிசியும், 1,345 மெ.டன் சர்க்கரையும், 290 மெ.டன் கோதுமையும், 1.20 இலட்சம் லிட்டர் மண்ணெண்ணெய், 870 மெ.டன் துவரம் பரும்பு, 930 மெ.டன் பாமாயில் மற்றும் 2,615 மெ.டன் AAY அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது என கூறினார்.
மேலும் , பொதுமக்களுக்குத் தேவையாக அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை அனுப்பிட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, மலைக்கிராமங்களிலும் செயல்படும் நியாய விலைக்கடைகள் மற்றும் நகரும் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தரமாக வழங்குவதை உறுதி செய்திட வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அதை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருப்பின் அந்தந்த நியாய விலைக்கடைகளில் தகவல் பலகைகளில் இடம் பெற்றுள்ள உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அய்யந்திருமாளிகை அங்கன்வாடி மையத்திற்குச் சென்று குழந்தைகளின் வருகைப் பதிவேடு, கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு, குடிநீர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்கள்.
0 Comments