மயிலாடுதுறை மாவட்டத்தில், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
The Forecast 1 year ago மயிலாடுதுறை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் நடைபெற்ற அரசு விழாவில், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 308 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 88 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 40 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 12,653 பயனாளிகளுக்கு 143 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, வளர்ச்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே. ராஜாராமன், இ.ஆ.ப., மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments