திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களை காவல் ஆணையர் பா.மூர்த்தி இ. கா. ப., ஆய்வு செய்தார்
S. Shanmuganathan 7 months ago திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி, இ.கா.ப., திருநெல்வேலி நகரத்தில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையம், திருநெல்வேலி சந்திப்பு சந்திப்பு காவல் நிலையம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்தாா்.
மேலும் காவல் நிலைய அறைகள், காவலா் குடியிருப்புகள், சுற்றுப்புறத்தை பாா்வையிட்டு சுத்தமாக வைத்திருக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அப்போது, மாநகர காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா, காவல் உதவி ஆணையா்கள் செந்தில்குமாா் (திருநெல்வேலி நகரம்), வெங்கடேசன் (திருநெல்வேலி சந்திப்பு) உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்
0 Comments