டெபிட் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்மில் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் அறிமுகப்படுத்தப்படும். இந்த வசதி ஏற்கனவே ஆக்சிஸ், யூனியன் வங்கி ஏடிஎம்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற வங்கிகளும் விரைவில் இதை விரிவுபடுத்த உள்ளன. ATM திரையில் தோன்றும் QR குறியீட்டை UPI Scanner மூலம் ஸ்கேன் செய்து, ரகசிய எண்ணைப் பதிவு செய்து அதிகபட்சமாக Rs. 50,000 டெபாசிட் செய்யலாம்.
0 Comments