Loading . . .




வரும் ஜன.6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது

The Forecast 1 year ago மின்னணு தேடல்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், வரும் ஜன.6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆக.20 முதல் அக்.18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர். இத்இல் நேரில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 901 விண்ணப்பங்கள், ஆன்லைன் வாயிலாக 5 லட்சத்து 38 ஆயிரத்து 490 விண்ணப்பங்கள் என மொத்தம் 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதில்,பெயர் சேர்க்க மட்டும், ஆன்லைனில் 1,08,872, நேரடியாக 9,22,372 விண்ணப்பங்கள், பெயர் நீக்க ஆன்லைனில் 2,69,200, நேரடியாக 2,81,915 விண்ணப்பங்கள், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய ஆன்லைனில் 1,60,372, நேரடியாக 5,66,605 விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விண்ணப்பங்களின் பரிசீலனை நவ.29 முதல் தொடங்கப்பட்டு, டிச 24-ம் தேதி வரை பரிசீலிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்தாண்டு ஜன.6 - ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் புதிய வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தில் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படும்.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News