தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை தவறான நோக்கத்திற்குப் பயன்படுத்தக் கூடாது : மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் தகவல்
The Forecast 1 year ago சேலம்
மாநில தகவல் ஆணையர் ஆர். பிரியகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மேலும், மாநில தகவல் ஆணையர் தலைமையில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 30 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் இருந்து பல்வேறு பொதுத்தகவல் அலுவலர்கள், மனுதாரர்கள் இந்த வழக்குகள் விசாரணையில் பங்குபெற்று அவர்களின் இரண்டாம் மேல் முறையீடு நேற்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு மாநில தகவல் ஆணையர் விளக்கமளித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ரவிக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.ஜெ. செந்தில் அரசன், வருவாய் கோட்டாட்சியர்கள் அ. அபிநயா மற்றும் ந. லோகநாயகி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments