சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சி, அமைச்சர் பெருமக்களால் தொடங்கி வைக்கபட்டது
The Forecast 1 year ago சேலம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48-வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியினை வேளாண்மை- உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தார்கள்.
உடன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் த.ஆபிரகாம், இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் வ.தட்சணாமூர்த்தி, இ.ஆ.ப., வேளாண்மை - உழவர் துறை வேளாண் இயக்குநர் பா.முருகேஷ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன். சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments