Loading . . .




சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை அலுவலர்கள் உறுதி செய்திட அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது

The Forecast 1 year ago சேலம்

சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., முன்னிலையில் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குருராஜன், மாநகரப் பொறியாளர் செல்வநாயகம், செயற்பொறியாளர்கள் ஆர்.செந்தில்குமார், திலகா, கே.செந்தில்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News