Loading . . .




குட்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் 144 பயனாளிகளுக்கு ரூ.92.69 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., வழங்கினார்கள் 

The Forecast 10 months ago சேலம்

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், குட்டப்பட்டி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., தலைமையில், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் நடைபெற்றது.

நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, பிற்படுத்தப்பட்டோர் நத்தம் பட்டா, ஆதிதிராவிடர் நத்தம் பட்டா, உட்பிரிவு பட்டா மாறுதல், உட்பிரிவற்ற பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஒருங்கிணைந்த சான்றிதழ், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மை - உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 144 பயனாளிகளுக்கு ரூ.92.69 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்டங்களை பெற்றுள்ள பயனாளிகள் தங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இதனைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., தெரிவித்தார்.

முன்னதாக, வருவாய்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், உதவி ஆட்சியர் (பயிற்சி) விவேக் யாதவ்,இ.ஆ.ப., மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் பொ.சுகுமார், கால்நடை பராமரிப்புத்துறை  மண்டல இணை இயக்குநர் மரு. பிரகாசம், வேளாண்மை இணை இயக்குநர் கு.சீனிவாசன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.ஜானகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், மேட்டூர் வருவாய் வட்டாட்சியர் சு.ரமேஷ் உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News