Loading . . .




இந்தியர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வருமானத்தை வழங்கிய பிளே ஸ்டோர்

Janani G 8 months ago மின்னணு தேடல்

ஆண்ட்ராய்டு மற்றும் பிளே ஸ்டோர் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. UK-யில் உள்ள Public First நிறுவனம் நடத்திய ஆய்வில், 2024-ம் ஆண்டில் மட்டும் இந்திய ஆப் டெவலப்பர்கள் ப்ளே ஸ்டோரின் மூலம் ரூ.4 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 35 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இந்தியர்கள் உருவாக்கிய ஆப்கள் நாட்டுக்குள் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியிலும் பலருக்குப் பயனளித்து வருகின்றன. பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் தொடக்கம், மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக உள்ளன என்றும் ஆய்வு விளக்குகிறது.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News