செம்மொழிப் பூங்காவிற்கு டிசம்பர் 1 முதல் அனுமதி : கட்டண விவரங்கள் வெளியீடு
The Forecast 5 months ago கோவை
செம்மொழிப் பூங்காவை டிசம்பர் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய நுழைவு மற்றும் பயன்பாட்டுக் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் பின்வருமாறு:
* பெரியவர்களுக்கு: ₹15
* குழந்தைகளுக்கு: ₹5
நடப்புப் பயிற்சிக்கான சிறப்பு பாஸ் கட்டணங்கள்:
* மாதாந்திர நடைபயிற்சி/ஜாகிங் பாஸ்: ₹100
* வருடாந்திர நடைபயிற்சி/ஜாகிங் பாஸ்: ₹1,000
மேலும், படப்பிடிப்புக்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன:
* வீடியோ கேமரா: ₹50
* குறும்படப் படப்பிடிப்பு (ஒரு நாளைக்கு): ₹2,000
* திரைப்படப் படப்பிடிப்பு (ஒரு நாளைக்கு): ₹25,000
இந்த அறிவிப்பால் பூங்காவுக்குச் செல்ல ஆவலுடன் காத்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Comments