Loading . . .




கோவை செம்மொழிப் பூங்கா சிறப்பம்சங்கள்: 28 வகையான தோட்டங்கள் அமைப்பு

The Forecast 5 months ago கோவை

கோவையில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா, சுமார் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ. 208.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்தப் பூங்கா சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக உள்ளது.

இங்கு, செம்மொழி வனம், மூலிகை, மகரந்தம், பாலைவனத் தோட்டம் என 28 வகையான பிரத்தியேகத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட செண்பக மரம், மிளகு, கல் இலவு போன்ற அரிய மர வகைகளும், 2,000க்கும் மேற்பட்ட ரோஜா வகைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும், கடையெழு வள்ளல்களின் கற்சிலைகள், 500 பேர் அமரும் திறந்தவெளி அரங்கம், உணவகம், செயற்கை நீர்வீழ்ச்சி கொண்ட நுழைவு வாயில் ஆகியவை உள்ளன. வாகன நிறுத்த வசதி, மழைநீர் சேமிப்பு அமைப்பு, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் போன்ற நவீன வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

0 Comments

Post your comment here

கோவை Relateted News