Loading . . .




தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக சேலம்,  பெரியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை தொடங்கி வைத்தார்

The Forecast 4 months ago சேலம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் கலந்து கொண்டார்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இத்திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்று வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். தற்போது, சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் பல்கலைக்கழக செயல்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டதன் மூலம் இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் பெரிதும் பயனடைவார்கள். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி இ.ஆப.,  பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நிருவாகக் குழு உறுப்பினர் சுப்பிரமணி, பதிவாளர் ராஜ், நான் முதல்வன் திட்ட பல்கலைக்கழக இயக்குனர் திருமூர்த்தி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


0 Comments

Post your comment here

சேலம் Relateted News