இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் மட்டும் கொண்ட குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரையின் படி, மொபைல் டேட்டா சேவை இல்லாத சிறப்பு கட்டண திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படலாம். இணைய சேவையை அதிகம் பயன்படுத்தாத பயனர்களுக்காக இந்த திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் இந்த திட்டங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், தற்போதைய ரீசார்ஜ் விலையை விட ₹40 முதல் ₹60 வரை குறைவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது, குறிப்பாக பட்டன் செல்போன் பயன்படுத்தும் மக்களுக்கு பயனளிக்கும்.
பயனர்களின் தேவைக்கு ஏற்ப சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைத்தொடர்பு சேவைகள் மேலும் எளிதாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments