அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகள், உயர் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார்.
The Forecast 3 years ago சேலம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் சேலம் மாவட்டம், மல்லியக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
இன்று (22.06.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் செவிலியர் குடியிருப்புகள், உயர் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும்
புற நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர் "
முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
டாக்டர் பொன் கௌதம் சிகாமணி அவர்கள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.எஸ்.சதாசிவம் அவர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments