அமைச்சர் .மா.சுப்பிரமணியன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 27-வது இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
The Forecast 3 years ago சேலம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம்
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் (22.06.2022) நடைபெற்ற 27-வது இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழாவில்,
மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மைச் செயலாளர்
முனைவர் ப.செந்தில்குமார், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள், சேலம் மாநகராட்சி மேயர்
திரு.ஆ.இராமச்சந்திரன் அவர்கள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்கள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.எஸ்.சதாசிவம் அவர்கள், மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.ஆர்.நாராயணபாபு அவர்கள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்
கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வள்ளி சத்தியமூர்த்தி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments