Loading . . .




வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிண்டர்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்து விழிப்புணர்வு

The Forecast 3 years ago சேலம்

வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிண்டர்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்து

பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆப., அவர்கள் தகவல்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.10.2022) எரிவாயு முகவர்கள்

மற்றும் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்

திரு.செ.கார்மேகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட

ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

சேலம் மாவட்டத்தில் வீடுகளுக்கான எரிவாயு இணைப்புகள் சுமார் 9.50 இலட்சம்

பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிண்டர்களை எவ்வாறு

பாதுகாப்பாக கையாள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை

மேற்கொள்ள எரிவாயு முகவர்களுக்கு இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிவாயு

பாதுகாப்புடன் கையாள்வது குறித்த துண்டு பிரசுரங்களை கேஸ் சிலிண்டர்களில் ஒட்டி வீடுகளில்

வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருக்கும் பகுதி

எப்போழுதும் நல்ல கற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பதையும், சிலிண்டரை எப்போதும் படுக்கை

நிலையில் வைத்து சமைக்காமல், செங்குத்தான நிலையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்பது

குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்போழுதும் கேஸ் அடுப்பினை, சிலிண்டரை விட உயரமான இடத்தில் மட்டுமே வைத்திட

வேண்டும் என்பது குறித்தும், சிலிண்டரை அடுப்புடன் இணைக்க படாமல் உபயோக்கப்படுத்தப்படாத

சூழ்நிலையில் அதற்குரிய வெள்ளை நிற மூடியால் மூடி வைக்கவும், சிலிண்டரில் உள்ள பொருட்களை

தாங்களாகவே மாற்றாமல் தங்களது முகவரை தொடர்பு கொண்டு சர்வீஸ் மெக்கானிக்கை

அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கேஸ் அடுப்பு உபயோகத்தில் இல்லாத பொழுது, இரவு நேரங்களில் ரெகுலேட்டரை

கண்டிப்பாக அணைத்து வைக்கவும். சமைக்கும் பொழுது அடுப்பின் அருகிலேயே இருக்க வேண்டும்,

காற்று அதிகமாக அடிக்கும் இடத்தில் இருந்தால் அடுப்பு அணைந்து கேஸ் கசிவு ஏற்பட்டு,

விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும் என்பது குறித்தும், மிகச்சிறந்த பாதுகாப்பான ஐ.எஸ்.ஐ தரம் உடைய கேஸ் சிலிண்டரின் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேஸ் அடுப்பு அருகில் விளக்கு, ஊது பத்திகளை வைக்க கூடாது எனவும், கேஸ் கசிவு

ஏற்பட்டிருந்தால் உடனே ரெகுலேட்டரை ஆப் செய்வதுடன், எல்லா ஜன்னல்கள் மற்றும் கதவுகளை

திறந்து வைத்திடவும், இத்தருணத்தில் எந்த மின்சார சுச்சுகளை போடவோ, அணைக்கவோ கூடாது.

அவசர உதவிக்கு 1906 என்ற எண்ணை அழைத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எரிவாயு முகவர்கள்

தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாள

வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வுகளை அதிக அளவில் ஏற்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.கார்மேகம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர்

(பொ) திரு.டி.எஸ்.துரைமுருகன், பாரத் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் மண்டல மேலாளர் திரு.முகேஷ் ரோஜ்ஷா, மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்

உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News