தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சேலம் ஆவின் நிறுவனம் 69 மெட்ரிக் டன் இனிப்பு வகைள் தயாரித்து விற்பனை செய்ய இலக்கு
The Forecast 3 years ago சேலம்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால்
தயாரிக்கப்படுகின்றது.
ஆவின் பொது மேலாளர் நா.சத்தியநாராயணன் அவர்கள் செய்தியாளர்
பயணத்தில் ஆய்வு மேற்கொண்டு தகவல்.
சேலம் ஆவின் நிர்வாகத்தின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு
வகைகள் விற்பனைக்கு தயார்செய்யப்பட்டு வருவதை ஆவின் பொது மேலாளர்
திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் இன்று (18.10.2022) செய்தியாளர் பயணத்தில்
ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் அவர்கள்
தெரிவித்ததாவது.
சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) 1978
ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. சேலம் ஆவின் நிறுவனம் 791 பால்
உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் 49,000 பால் உற்பத்தியாளர்களிடமிருந்து
தினசரி 6.03 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்திலேயே அதிக பட்சமாக சுமார் 42 பால் உபபொருள்களுடன் சர்வதேச
சான்றிதழுடன் சேலம் ஆவின் பால் நிறுவனம் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து
வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டுறவு நிறுவனங்களை
இலாப நோக்கம் அல்லாது சேவை நோக்கத்தோடு பொதுமக்களுக்கு பல்வேறு
சேவைகள் கிடைத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக
செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தரம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு
ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான
விலையில் வழங்கி விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாக இந்நிறுவனம்
திகழ்ந்து வருகிறது.
சேலம் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் உப பொருட்களான வெண்ணெய்,
நெய், தயிர், பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, சாக்லேட், ஐஸ் கிரீம்
முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில், தகுந்த சூழ்நிலையில், தேவையான
சர்க்கரை அளவுடன் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை
விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சேலம் ஆவின்
பால் நிறுவனத்தின் சார்பில் சாதா மைசூர்பா, மில்க் கேக், பால்கோவா, கேரட் மைசூர் பா,
ஸ்பெஷல் மைசூர்பா, நெய் லட்டு. மோதி லட்டு, முந்திரி கேக். ஸ்பெஷல் மிச்சர்,
வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள் விற்பனைக்கு தயார் செய்யப்படுகிறது. இவை
அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற தூய
பசும்நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளாகும்.
இந்த தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சேலம் ஆவின் நிறுவனம் 69
மெட்ரிக் டன் இனிப்பு வகைள் தயாரித்து விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு.
பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள்
இனிப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் மூலம் சேலம் ஆவின்
நிறுவனத்திற்கு ரூ.3.12 கோடி வருவாய் கிடைக்கும். இந்த இனிப்பு வகைகளை
பொதுமக்கள்
ஆவின்
ஆவின்
பார்லர்கள்
மற்றும்
சில்லரை
விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி பயன்பெறலாம்.
மேலும், தேவைக்கேற்ப தரமான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை
எங்களது சேலம் ஒன்றியத்தில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும்,
தொடர்கொள்ள சேலம் -9944584836, 9443026950, மேட்டூர் 1- 9488062377,
எடப்பாடி - 9629623749 மற்றும் 7373704800, 9751694664 ஆகிய தொலைபேசி
எண்களை தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான ஆர்டர்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு ஆவின்
பொது மேலாளர்
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.நா.சத்தியநாராயணன் அவர்கள் செய்தியாளர் பயணத்தின்போது தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் பயணத்தின்போது ஆவின் உதவி பொது மேலாளர்
திருமதி.பிரவினா, மேலாளர் திரு.பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 Comments