சேலம்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை திடீர் ஆய்வு
The Forecast 3 years ago சேலம்
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு
வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும்
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவர் /நிர்வாக இயக்குநர்
.எஸ்.சிவசண்முகராஜா, இ.ஆ.ப,அவர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவர் /
நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சிவசண்முகராஜா, இஆ.ப., அவர்கள் மற்றும் சேலம் மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.செ. கார்மேகம், இஆப. அவர்கள் ஆகியோர் இன்று (19.10.2022) ஆய்வு
மேற்கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக
பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில்
மாவட்டங்கள் தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அரசின் பல்வேறு
துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வளர்ச்சித்
திட்டங்கள் முறையாக செயல்படுத்துவது குறித்தும், வடகிழக்கு பருவமழைக்காலங்களில்
மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்திடவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றையதினம் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கத்தேரி
ஊராட்சியில் தனியார் நிலத்தில் உள்ள குட்டைக்கு உரிய வடிகால் வசதிகள் மேற்கொள்வது
தொடர்பாகவும், எடப்பாடி அரசு மருத்துவமனையில் மருந்துகளின் இருப்பு, மருத்துவ
உள்கட்டமைப்பு, வளாகத் தூய்மை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள்
உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, எடப்பாடி பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ள சரபங்கா
நதியையும், எடப்பாடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.235
கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் 10 வகுப்பறை கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடம்,
பெண்கள் கழிவறை மற்றும் குடிநீர் வசதிப் பணிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்.
பின்னர், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சி, வாரக்காடு
பொன்னி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும்
அதன் இருப்பு குறித்தும், பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும் திடீர் ஆய்வு
மேற்கொண்டார், இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் ரூ.65284 கோடி மதிப்பீட்டில்
ஆட்டையாம்பட்டி பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணசாலை பேரூராட்சிகள் மற்றும்
வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக
குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம்,
கோரணம்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் இடைநிலை நீருந்து நிலைய கட்டுமானப்
பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தாரமங்கலம், பாப்பம்பட்டி ஊராட்சி, தச்சான்காட்டூர் பகுதியில் இலங்கை
தமிழர்களுக்காக ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் 244 புதிய வீடுகளுடன் மறுவாழ்வு முகாம்
கட்டடப்பட்டுவரும் பணிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல்
போக்குவரத்துக் கழகத் தலைவர் / நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சிவசண்முகராஜா.இ.ஆ.ப.
அவர்கள் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள்
ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இதனைத்தொடர்ந்து, பிற்பகல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு
பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும்
பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்து அரசுத் துறை
அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பூம்புகார் கப்பல்
போக்குவரத்துக் கழகத் தலைவர் / நிர்வாக இயக்குநர் திரு.எஸ்.சிவசண்முகராஜா, இஆ.ப,
அவர்கள் தலைமையில், சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இஆப, அவர்கள்
முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, வருவாய்
கோட்டாட்சியர்கள் சி.விஷ்ணுவர்த்தினி, மு.சௌமியா, செல்வி.எஸ்.சரண்யா
உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments