Loading . . .




கோட்டை மேடு பகுதியில் ராட்சத ஆலமரம் சாய்ந்தது

The Forecast 3 years ago கோவை

கோவை, அக்.29, கோவை உக்கடம் கோட்டை மேடு மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சுமார் 90 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆலமரம் உள்ளது. இந்த மரம் நேற்று மாலை திடீரென்று சாய்ந்தது. இந்த மரம் பள்ளி சுற்றுச்சுவர் மீது விழுந்ததுடன், அங்கிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீதும் விழுந்தது. இதனால் வாகனங்கள் மரத்தின் அடியில் சிக்கிக்கொண்டன. மேலும் மரம் விழுந்ததில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை தெற்கு தீயணைப்பு அலுவலர் முருகையன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராட்சத ஆலமரத்தை நவீன உபகரணங்கள் மூலம் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் விழுந்தபோது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News