சேலம் பால்பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலை
The Forecast 3 years ago சேலம்
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் அவர்கள் (13.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் சேலம் பால்பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் அதிநவீன தொழில்நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இதனையொட்டி சேலம் ஆவின் பால்பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம், இ.ஆ.ப., சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.அருள் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., ஆவின் பொது மேலாளர் .சி.விஜய்பாபு, சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.மலர்கொடி ராஜா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments