சேலம் கோட்டம் சார்ந்த 2 நகரப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்.கே.என்.நேரு துவங்கி வைத்தார்
The Forecast 3 years ago சேலம்
சேலம் கோட்டம் சார்ந்த 2 நகரப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்.கே.என்.நேரு துவங்கி வைத்தார்
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள்
2 நகரப் பேருந்துகளைக் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை., சேலம் கோட்டம் சார்ந்த 2 நகரப் பேருந்துகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்.கே.என்.நேரு அவர்கள் இன்று (14.01.2023) சேலம், கன்னங்குறிச்சி பேருந்து நிலையத்தில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்கள். பின்னர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
சேலம் நகரப் பேருந்து நிலையம் முதல் சேலம் நகரப் பேருந்து நிலையம் (வழி) வின்சென்ட், அஸ்தம்பட்டி, சின்ன திருப்பதி, கன்னங்குறிச்சி, எமரால்டு பள்ளி, அடிவாரம், கோரிமேடு, அஸ்தம்பட்டி, வின்சென்ட்; அடிவாரம் முதல் ஜங்சன் (வழி) கோரிமேடு, அஸ்தம்பட்டி, 5 ரோடு, சோனா கல்லூரி; கன்னங்குறிச்சி முதல் ஜங்சன் (வழி) சின்னதிருப்பதி, அஸ்தம்பட்டி, 5 ரோடு சோனா கல்லூரி வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும்.
இதன்மூலம், அரசு இருபாலர் கலைக்கல்லூரி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அவ்வழித்தடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர்கள், பொது மக்கள் ஆகியோர் கூடுதல் பேருந்து வசதி பெறுவார்கள். மேலும், கன்னங்குறிச்சி முதல் ஏற்காடு அடிவாரம் வரை உள்ள தடப்பகுதி புதிதாக நகரப்பேருந்து வசதியைப் பெறுகிறது. இவ்வாறு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் .செ. கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன் அவர்கள், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் .எஸ்.ஆர். பார்த்திபன் அவர்கள், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் .இரா.இராஜேந்திரன் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) .சங்கீத் பல்வந்த் வாகி, இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சித் துணை மேயர் மா.சாரதாதேவி அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் திரு. இரா.பொன்முடி மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 Comments