சாலைப்பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சாலைப்பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்
(22.02.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை
தொடர்ச்சியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். அந்தவகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் சாலைப்பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது.
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்
விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் தலைக்கவசம்
மற்றும் சீட்பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது போன்ற சாலைபாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற
வேண்டும் என்பதை வலியுறுத்தி சாலைகளின் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு விளம்பர
பதாகைகள் நெடுஞ்சாலைகள் துறையின் சார்பில் வாகன ஓட்டிகள் எளிதில் அறியும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணங்களாக இருச்சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால்
அமர்ந்து இருப்பவர் இருவரும் தலைகவசம் அணியாதது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியை பயன்படுத்துவது, மோட்டார், கார் போன்ற 4 சக்கர
வாகனங்களில் சீட்பெல்ட் அணியாதது மற்றும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்காதது
உள்ளிட்டவைகளால் விபத்துகள் ஏற்படுகின்றது. எனவே, போக்குவரத்துத்துறை அலுவலர்கள் வாகன தணிக்கைகளை தீவிரப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுருத்தப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு மற்றும் சாலை விதிகள் குறித்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் தெரியும் வண்ணம் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அனைத்துத்துறை அலுவலர்களும்
ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். சாலைப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தனி மனிதனும் சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தினைத் தவிர்ப்பதாகும். சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், உறுப்பிழப்புகள் மற்றும்
கொடுங்காயங்களின் விளைவாக மன அளவிலும், பொருளாதார நிலையிலும் பல குடும்பங்கள்
பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் அனைத்து
மக்களின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும். சேலம் மாவட்டத்தை சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற அலுவலர்கள் முனைப்பாக செயல்படவேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் . செ.கார்மேகம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள
சுழலும் வகையிலான விழிப்புணர்வு தலைக்கவச மாதிரி இயக்கத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர் .செ.கார்மேகம்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.எம்.ஜெகன்நாதன், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments