கோவை, ஜூலை 12: கோவை மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளன. அண்மையில் மாநகராட்சி சார்பாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் மூலம் இது தெரியவந்தது. இதனையடுத்து மாநகராட்சியுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தெரு நாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் இப்பணி மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி, கிருஷ்ணாபுரம், இளங்கோ நகர், புத்தர் நகர், அக்பர் நகர் பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டன. இம்மாதம் இறுத்திக்குள் 5 ஆயிரம் தெரு நாய்களுக்கு இப்பணியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி இப்பணியை மேற்கொள்ளும்’’ என்றார்.____
0 Comments