Loading . . .




குடிநீர் விநியோகம் நாளை தடை

The Forecast 2 years ago கோவை

கோவை, ஆக. 7: கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வரும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் உள்ள வெள்ளியங்காடு நீரேற்று நிலையம் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தினரால் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாலும், மேற்படி வெள்ளியங்காடு நீரேற்று நிலையத்தில் உள்ள கட்டமைப்புகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் வரும் 8ம் தேதி காலை 9 மணி முதல் 9ம் தேதி மாலை 6.00 மணி வரையிலும் பில்லூர் இரண்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் தடைபடும்.  பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.   

0 Comments

Post your comment here

கோவை Relateted News