Loading . . .




மாதிரி வாக்குப்பதிவு : கலெக்டர் ஆய்வு

The Forecast 2 years ago கோவை

 கோவை, ஆக. 8: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் இருப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில், மாதிரி வாக்குப்பதிவு செய்யப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தேர்தல் இருப்புக் கிடங்கில்  7578 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4806 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 4719 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்களும்  என மொத்தம் 17106  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெல் நிறுவன பொறியாளர்களால் முதல்நிலை சரிபார்ப்பு பணியின்போது சரிபார்க்கப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு மொத்தமாக 5 சதவீதம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இன்றைய தினம்  4806 கட்டுப்பாட்டு அலகில் 1200 வாக்குகள் 48 இயந்திரங்களிலும், மற்றும் 1000 வாக்குகள் 96 இயந்திரங்களிலும், நாளைய தினம் 500 வாக்குகள் 96 இயந்திரங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இன்று நடைபெற்ற இம்மாதிரி வாக்குப்பதிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News