Loading . . .




வேகம் எடுக்கும் விமான நிலைய விரிவாக்கம்

The Forecast 2 years ago கோவை

கோவை ஆக.10: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியை, செப்., 30க்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்

இதில், 461.90 ஏக்கர் நிலம் தனியாருக்கு சொந்தமானது. நில உரிமையாளர்களின் ஆவணங்களை சரிபார்த்து, இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதில், 50 ஏக்கர் மட்டும் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது.ஒரே சொத்துக்கு பலர் உரிமை கோருவது; சொத்து ஆவணப்பத்திரம் இல்லாதது; வாரிசு பிரச்னை, கூடுதல் இழப்பீடு கோருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதால், சில நிலங்களை கையகப்படுத்துவதில் சிக்கல் தொடர்கிறது. அதற்குரிய இழப்பீடு தொகையை, கோர்ட்டில் செலுத்தி விட்டு, கையகப்படுத்த, வருவாய்த்துறையினர் திட்டமிட்டிருக்கின்றனர்.அரசுக்குசொந்தமான, 28 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்வதற்கான பணிகளில், வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல், பாதுகாப்பு துறைக்கு சொந்தமான, 135 ஏக்கர் நிலத்தை வகை மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.


நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை, செப்., 30க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பணி செப்டம்பரில் முடியும்'விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் டி.ஆர்.ஓ., பொறுப்பை, கூடுதலாக கவனிக்கும் டி.ஆர்.ஓ., ஷர்மிளா கூறுகையில், ''இன்னும், 50 ஏக்கர் மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.

அருகாமையில் உள்ள ரோடுகளில் இருந்து, விமான நிலையத்துக்கு செல்வதற்கான அணுகு சாலை உருவாக்க, 17.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கான கருத்துரு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி, செப்., 30க்குள் முடியும்,'' என்றார்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News