Loading . . .




ஏற்காட்டில் கொட்டும் மழையில் சாலை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செ. கார்மேகம், இ.ஆ.ப., ஆய்வு

The Forecast 2 years ago சேலம்

மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி

உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும்

வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

அந்தவகையில், மலைவாழ் மக்களின் நீண்ட கோரிக்கையினை ஏற்று, ஊரக

வளர்ச்சித்துறையின் சார்பில் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், கொட்டஞ்சேடு முதல்

கே.நார்த்தஞ்சேடு வரையிலான 3.60 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும்

பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு

செய்யப்பட்டது. கொட்டஞ்சேடு முதல் கே.நார்த்தஞ்சேடு வரையிலான மலைகிராம

மக்கள் போதிய சாலை வசதியின்றி 18 சுற்றி செல்ல வேண்டி நிலை இருந்து வருகிறது.

பள்ளிக்குழந்தைகள் பள்ளிக்கு செல்வதிலும் மிகுந்த சிரமப்பட்டு வந்த நிலையில்

தற்பொழுது இந்த புதிய சாலை வசதி கொட்டஞ்சேடு முதல் கே.நார்த்தஞ்சேடு

வரையிலான 3.60 கி.மீ நீளத்திற்கு ரூ-6.50 கோடி மதிப்பில் அமையும் பட்சத்தில்

மலைவாழ் மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவு செய்யப்படவுள்ளது. இந்த சாலைப்

பணிகளை விரைவில் முடிக்கப்பட்டு மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு

வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி,

மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்

உள்ளிட்டவற்றை நிறைவேற்றித்தரவும் துறை அலுவலர்கள் முனைப்போடு

பணியாற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை,

இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) .சுவாதிஸ்ரீ, இ.ஆ.ப., ஏற்காடு வருவாய்

வட்டாட்சியர் .ம.தாமோதரன், ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலர்

அன்புராஜன், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News