முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளம்
The Forecast 1 year ago காங்கிரஸ்
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றமும் ஒரு நாள் ஊதியத்தை மிஜாம் நிவாரண நிதிக்கு வழங்குகிறது. மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.அப்துல் சமது ஆகியோரும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமைச் செயலக ஊழியர்களும் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு அளித்து வருகின்றனர். தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், இணைச் செயலாளர் லெனின் ஆகியோரும் தங்கள் ஆதரவை உறுதி செய்துள்ளனர்.
0 Comments