Loading . . .




தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி இந்திய பசுமை வர்த்தக மையத்தில் பதிவு செய்து பசுமை நகர திட்டத்தில் இணைந்துள்ளது

The Forecast 2 years ago திருப்பூர்

இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பசுமை வர்த்தக மையம் சார்பில் பசுமையான நகர்ப்புற சூழலை அடைவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் முதல் மாநகராட்சியாக திருப்பூர் மாநகராட்சி இந்திய பசுமை வர்த்தக மையத்தில் பதிவு செய்து பசுமை நகர திட்டத்தில் இணைந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் பவன்குமார் கிரியப்பன வர் முன்னிலை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், சி. ஐ. ஐ. தலைவர் சங்கீதா வேல்கிருஷ்ணா, துணை தலைவர் இளங்கோ, மில்டன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உலகத்தரம் வாய்ந்த பசுமையான நகர்ப்புற சூழலை அடைவதற்கு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு மாநகரின் காற்றின் தரம், பசுமை சூழலை மேம்படுத்துவது, கழிவு மேலாண்மை மறுசுழற்சி, மின்ஆளுமை உள்பட நகர மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. திருப்பூர் சி. ஐ. ஐ. ஏற்கனவே திருப்பூரில் 25 நிறுவனங்களை பதிவு செய்து கார்பன் நடுநிலையை அடைந்துள்ளது. 15 தொழில்களை இணைத்து வருகிற பிப்ரவரி மாதத்தில் கிரீன் கோ மதிப்பீட்டுக்கான கிளஸ்டர் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

0 Comments

Post your comment here

திருப்பூர் Relateted News