Loading . . .




“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ், 1,673 பயனாளிகளுக்கு ரூ.7.82 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்கள்

The Forecast 2 years ago சேலம்

அமைச்சர் கே.என். நேரு , சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன்,

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட சிறப்பான திட்டங்களில் ஒன்றான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமானது சேலம் மாவட்டத்தில் கடந்த 18.12.2023 முதல் 06.01.2024 வரை 16 நாட்களில் முதற்கட்டமாக 142 முகாம்கள் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது துறை வாரியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டதன் அடிபடையில் நேற்று, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சேலம் மாநகராட்சி, தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,673 பயனாளிகளுக்கு ரூ.7.82 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சிகள் துறை, மாநகராட்சி, எரிசக்தித் துறை, மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளின் வாயிலாக 1,673 பயனாளிகளுக்கு ரூ.7.82 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் சேலம் மாவட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000/- வீதம் 5.50 இலட்சம் மகளிருக்கு உதவித்தொகையும், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1,504 பள்ளிகளில் பயிலும் 99,690 மாணாக்கர்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகிறது. மேலும், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் 18.91 கோடி மகளிர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1,000/- வீதம்  24,933 மாணவிகளுக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 82,837 மாணவ, மாணவிகளுக்கு திறன் பயிற்சிகளும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 29,51,068 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 5 வகையான நோய்கள் கண்டறியப்பட்டு, 6,91,435 நபர்களுக்கு சிகிச்சைகளும், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மூலம் 12,305 நபர்களும் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி 10,29,553 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இதுவரை பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.209.11 கோடி ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளும், 76,031 புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், 7,436 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதல்வரின் முகவரித் துறையின் மூலம் பெறப்பட்ட 1,42,454 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறினார்.

முன்னதாக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாநகராட்சி, குகை, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.79.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தினைத் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ஆ. இராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், துணை மேயர் மா.சாரதாதேவி, மாநகராட்சி ஆணையாளர் சீ. பாலச்சந்தர், இ.ஆ.ப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ. மேனகா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ம.வாணி ஈஸ்வரி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், அஸ்தம்பட்டி மண்டலக் குழுத் தலைவர் உமாராணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

0 Comments

Post your comment here

சேலம் Relateted News